முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான சன் டி.வி. ஊழியர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சன் தொலைக்காட்சிக்கு  சட்டவிரோதமாக பி.எஸ். என். எல்லின்  அதிவிரைவு இணைப்புகளை வழங்கிய வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி,தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் கவுதமன் உள்ளிட்ட மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது முன்னாள் மத்திய அமைச்சர்  தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது,  323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் நிறுவனமான சன் டிவிக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக , பத்திரிக்கையாளர் எஸ். குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐ க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின் அடிப்படையில், 2013 ம் ஆண்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்ம நாதன் மற்றும் சன் டிவி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன் ,சன் டிவியின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன் , எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சிபிஐ போலீசார் கடந்த 21 ம் தேதி கைது செய்தனர்.பின்னர், இந்த மூவரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. கிருஷ்ணமூர்த்தி முன்பு  ஆஜர் படுத்தப்பட்டனர்.
 
இதையடுத்து ,  மூன்று பேரையும் பிப்ரவரி  4 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி  உத்தரவிட்டார் .சிபிஐ தரப்பில் இந்த மூன்று பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிபிஐ கோர்ட்டு  நீதிபதி ஜெ.கிருஷ்ண மூர்த்தி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்துள்ளது. இதுதொடர்பாக இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி ராஜேஷ் குமார் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.கைதானவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ள சிபிஐ கோர்ட்டு தவறி விட்டது. எனவே அந்த உத்தரவை ரத்து. செய்ய வேண்டும்,கைதான மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .இந்த மனு நீதிபதி ஆர். மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆஜரானார் . இந்த மனு குறித்து திங்களன்று பதில் அளிக்கும்படி, கைதான கவுதமன், கண்ணன், ரவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து