முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி குறித்து ராகுல் விமர்சனம்: பாஜக கண்டனம்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்த போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோட்டை பிரதமர் மோடி அணிந்திருந்ததை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளும் போது தேர்தல் அறிக்கைகளையும் மக்களிடையே விளக்க வேண்டும். அதனை விடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் உடை பற்றி விமர்சிப்பதால் எந்த பலனும் இல்லை. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடந்து வருகிறது. எனவே விரக்தி காரணமாக பிரதமர் மோடியை ராகுல்  காந்தி விமர்சிக்கிறார் என்றார் அவர்.
 
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்குகளிலும் ரூ. 15  லட்சம் முதலீடு செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு ஒபாமா வருகையின் போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஆடம்பர கோட்டை மோடி அணிந்தார் என்று அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து