முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் -  ஆந்திரா மற்றும்  தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே 32 பேர் பலியாகி இருந்தனர். நேற்று முன்தினம் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 58  மற்றும் 80 வயது பெண்கள் 2 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உஸ்மானியா மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் நோய் பிரிவு வார்டில் ப ணியாற்றி வந்த 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் தொற்றியது.

அவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் இது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தெலுங்கானா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை மந்திரி லட்சுமி ரெட்டி உஸ்மானியா மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு செய்தார். பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை பற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து