முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 90 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்  - ஆந்திராவில் கொத்தடிமைகளாக வேலை செய்த 90 குழந்தைகளை ஐதராபாத் போலீசார் மீட்டனர். இவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்த சிறுவர்கள்.

பீகார்,  உத்திரபிரதேச மாநிலங்களை சேர்ந்த சிறுவர்கள் ஆந்திராவில்  கொத்தடிமைகளாக வேலைபார்த்து வருகின்றனர் எனவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆந்திர மாநில போலீசார் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று ஐதராபாத்தில் உள்ள பவானி நகரில் போலீசார் நடத்திய சோதனையில், தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த 200க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டனர். தோல் பொருட்கள், வளையல்கள்  தயாரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக சிறுவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில் ஐதராபாத் போலீசார் தொடர்ந்து நடத்திய சோதனையில், மேலும் 90 சிறுவர்கள்  மீட்கப்பட்டனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் அனை வரும் 8 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஏழைக்  குடும்பங்களின்  வறுமையை பயன்படுத்தி சிலர், ரூ.20000  கொடுத்து சிறுவர்களை வேலைக்கு அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. சிறுவர்கள்  தங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காமலும், சுகாதாரமற்ற சூழலில் தங்கவைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து