முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஜம்மு - ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  பொதுமக்கள் 3 பேர்  காயம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமையன்று  தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில்  கர்னல் ராய் உயிரிழந்தார். 2  தீவிரவாதிகள்  சுட்டுக்  கொல்லப்பட்டனர்.

குடியரசு தினத்தன்று யுத்தசேவை விருது பெற்ற  கர்னல் ராய், வீர மரணம்  அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளின் ஊடுருவல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி  எல்லை  கட்டுப்பாட்டு பகுதிகளில்  அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.  குறிப்பாக, கடந்த சில தினங்களில் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு ஜம்முவின், அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய  நிலைகளை குறிவைத்து துப்பாகி சூடு நடத்தியது. இதில், 3 பொதுமக்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த போல்தேவி(44), தர்ஷன் லால்(41), விக்கி குமார்(20) ஆகியோர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம்  நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகினர்.  வீடுகளை விட்டு வெளியேறி அங்குள்ள  பதுங்கு குழிகளில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது.

சமீபகாலமாக விதிமுறைகளை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான்  ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்தாண்டு அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான்  ராணுவத்துக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து