முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் புதிய அரசு : பாஜ, பிடிபி இடையே உடன்பாடு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  முப்தி முகமது  தலைமையிலான  மக்கள் ஜனநாயக  கட்சிக்கு  ஆதரவு அளிப்பதாக  காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் அறிவித்தன. இருப்பினும்  அவற்றின் ஆதரவில் ஆட்சி அமைப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரான என முப்தி மறுத்து விட்டார்.

பாஜவுடன்  கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து  இழுபறி நிலவியது. யாரும் ஆட்சி அமைக்க முன்வராத  நிலையில் புதிய அரசு அமைக்க கவர்னர் விதித்த  காலக்கெடு முடிவதற்குள்  அங்கு ஜனாதிபதி ஆட்சி  அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாஜ மற்றும் பிடிபி இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தையில்  உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்படுகிறது.

இன்னும் 5 அல்லது 6 தினங்களில் குறைந்த பட்ச செயல் திட்டம் வெளியிடப்படும் என  பாஜ மாநில பொது செயலாளர் அசோக் கோல் தெரிவித்துள்ளார். கூட்டணி அரசு அமைப்பது குறித்து இரு கட்சி தலைவர்களும் கடந்த புதன் கிழமை கவர்னர்  வோராரை தனித்தனியாக  சந்தித்து ஆலோசனை நடத்தினர். வரும் 9ம் தேதி ஆட்சி அமைக்க உரிமை கோரப்படுகிறது. பிடிபி தலைவர்  முப்தி முகமது முதல்வராகிறார்.

பாஜவுக்கு துணை முதல்வர்  பதவியும், சபாநாயகர் பதவியும் தர பிடிபி ஒப்புக் கொண்டுள்ளது. வரும் 15ம் தேதி காஷ்மீரில் புதிய அரசு பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அங்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்  கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக 15 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இதில் பாதி இடம் பாஜவுக்கு ஒதுக்கப்படுகிறது. சாஜட் லோன் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் 2  இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து