முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பில் 60 பேர் பலி

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

கராச்சி - பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூர் மாவட்டம் லக்கி டார் பகுதியில் ஷியா முஸ்லிம்களின் மசூதி உள்ளது. அந்த மசூதியில் தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 60 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந் தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இத னால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 
குண்டுவெடிப்பு குறித்து தடயங்களை சேகரிப்பதற்காக வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தான் போலீஸார் மற்றும் ராணுவ அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜுன்டுல்லா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த அமைப்பு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
 
குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து ஜுன்டுல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பகாத் மார்வத் கூறியபோது, எங்களுடைய முதல் எதிரி ஷியா முஸ்லிம்கள். அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து