முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண் பேடி பற்றிய கட்ஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லி முதல்வர் வேட்பாளராக ஷாஸியா இல்மியை நிறுத்தினால், தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றிபெறும், ஏனென்றால் கிரண் பேடியைவிட ஷாஸியா இல்மி அழகானவர் என்று மார்கண்டேய கட்ஜூஅவரது ட்விட்டரில் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவர் மார்கண்டேய கட்ஜூ இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "கிரண் பேடியைவிட ஷாஸியா இல்மி அழகானவர். அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால், பாஜக நிச்சயம் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. குரேஷியா நாட்டுத் தேர்தலில் அழகானவர்கள் தான் அதிகமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. எனவே டெல்லியிலும் அழகான ஷாசியா இல்மியை வேட்பாளராக பாஜக நிறுத்தினால், வாக்களிக்க விரும்பாத என்னை போன்றவர்களும் கூட, வாக்களிக்க நிச்சயம் முன்வருவோம்" என்று தெரிவித்தார்.
 
கட்ஜூவின் இந்த கருத்துக்கு ட்விட்டர் பக்கத்தில் மிகப் பெரிய எதிர்வினை வந்துகொண்டிருக்கிறது. அவரது கருத்து மிகவும் ஆபாசமான ஒன்றாக இருப்பதாக ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு சர்ச்சைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து