முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மாவோயிஸ்டு தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் கைது

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சி அருகே பனம்பள்ளி நகரில் தனியார் நிறுவன அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு வயநாடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா கழக அலுவலகம் தாக்கப்பட்டது.

6 மாவோயிஸ்டுகள் இங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். 2 நாட்களுக்கு முன்பு கொச்சி அருகே கமலாச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் தாக்கப்பட்டது. இங்கு 7 பேர் கொண்ட கும்பல் புகுந்து அலுவலக கோப்புகள், கம்ப்யூட்டர்கள் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை அடித்து நொறுக்கி விட்டு அவற்றை தீவைத்து கொளுத்தினர். மேலும் அங்கு மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள அதிரடிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கொச்சியை அடுத்த தேவரே பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரும், மனித உரிமை ஆர்வலருமான ஜெய்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபோல அதே பகுதியைச் சேர்ந்த துஷார் நிர்மல் என்பவரும் கைதானார். இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 6 ம் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே களமாச் சேரி தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் போலீசார் பிடியில் சிக்கினர். அவர்களையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து