முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய விளையாட்டு போட்டி கோரளாவில் நேற்று தொடக்கம்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இதற்கு மாவோயிஸ்டுகல் மிரட்டலால்ல் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 35–வது தேசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. கடந்த 1 மாதமாக  இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது. நேற்று மாலை நடைபெற்ற தொடக்க  விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந், கேரள முதல்– அமைச்சர் உம்மன் சாண்டி, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருவ ராதாகிருஷ்ணன்,  திருவனந்த புரம் மேயர் சந்திரிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

35– வது தேசிய விளையாட்டுப்போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர் விளையாட்டு சுடரை அளிக்க, அதனை முன்னாள் தடகள வீராங்கனைகள் பி.டி.  உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டு தீபத்தை ஏற்றி வைக்க போட்டியில் பீச்  வாலிபால், படகுப் போட்டிகளும் நடந்தன.

தொடக்க  விழாவையொட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று மாலை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ராணுவ விமானத்தின் மூலம்  ஸ்டேடியத்தில் மலர் தூவப்பட்டன.கேரளாவி பாரம்பரிய செண்டை மேள  கலைஞர்கள், கதகளி கலைஞர்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட குழுவினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இதனை பொதுமக்களும் கண்டுகளிக்க ஏதுவாக நேற்று பிற்பகலுக்கு மேல் திருவனந்தபுரத்தில்  செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே மாவோயிஸ்டு தீவிரவ தாக்குதல் நடந்து வருகிறது. சில் தினங்களுக்கு முன் கூட கொச்சியை அடுத்த பனம்பள்ளி நகரில் இந்திய  தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். மேலும்  அவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போட்டிகள் நடைபெறும் அனைத்து ஸ்டேடியங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கென 5 ஆயிரம்  போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து