முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொற்றுநோய் பரவாமல் தடுத்திட அலுவலர்கள் பணியாற்ற வேண்டுகோள்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

கரூர் மாவட்டம், தளவாபாளையம், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் 31.01.2015 இன்று பொதுசுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்;, ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர்  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்., நகராட்சி நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ்., ஊரகவளர்ச்சித்துறை இயக்குநர் கா.பாஸ்கரன்., பேரூராட்சி இயக்குநர் ராஜேந்திரரத்னு.,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு சமீப காலமாக தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட சுற்றுப்புறசுூழ்நிலையினால் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுத்திடும் வகையில் மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்புூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊரகவளர்ச்சிமுகமை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்டங்களில் எளிதாக பரவக்கூடிய வைரஸ்காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஒவ்வொரு மாவட்ட வாரியாக அந்தந்த துறையின் வாயிலாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு செய்து வருங்காலங்களில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்ற சுூழல் உருவாகிடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்கள்.

மேலும் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேவையற்ற வதந்திகளை தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களிடத்தில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  பேசுகையில்

மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா  ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதியினை அதிகரித்து வழங்கி வருகிறார்கள். அதிலும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இதுவரைக்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.7005கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி உள்ளாட்சித் துறையைப் பொருத்தவரை அதிலும் முழு தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். அதே போல் போக்குவரத்துத்துறையைப் பொருத்தவரை 4 முறை டீசல் விலையை உயர்த்தியும், பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி விலையில்லா பேருந்து பயண அட்டையை வழங்கியது மட்டுமின்றி பேருந்து கட்டணத்தையும் உயர்த்தாமல் பொதுமக்களின் நலன் கருதி  பயன்பெறும் விதத்தில் அரசுக்கு சிறந்த வழிகாட்டியாக அம்மா செயல்பட்டு வருகிறார்கள்.

கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் மருத்துவக்கல்லூரி கட்ட அனுமதி,  குடிநீர் திட்டத்திற்கு ரூ.68 கோடி என மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவதுடன் இதுபோன்ற வளர்ச்சி பணிகளுக்கு ஆறு மாவட்டத்திற்கு மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தை கரூரில் நடத்த அனுமதித்த மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களுக்கு கரூர் மாவட்ட மக்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருப்போம்.

அதுமட்டுமின்றி தற்பொழுது பொதுசுகாதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் மூலம் மாவட்டத்தில் கொசுக்கள் முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுசுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனைக்கு வரும் மக்களிடம் அன்போடு நடந்து கொண்டு மருத்துவமனைக்கு வரும் பாதிக்கப்பட்ட நபர்களை நம்மில் ஒருவராக எண்ணி அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்து சிகிச்சை வழங்க முடியுமோ அந்த வகையில் சிகிச்சை வழங்கி அவர்களை பாதுகாத்திட வேண்டும். அத்தகைய சிறப்பு மிக்க பணியில் உள்ள நீங்கள் சிறப்புடன் பணியாற்றி மாவட்டத்திற்கு பெருமை தேடி தர வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  தெரிவித்தார்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்;, ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பேசுகையில்

மாண்புமிகு மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழக அரசு சுகாதார வசதிகளை மேம்படுத்தி தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கரூர் மண்டல அளவில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஒருங்கிணைந்து சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் ஒவ்வொருவரின் உயிர் என்பது உன்னதமான ஒன்று. அந்த உயிருக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராமல் பாதுகாப்பது என்பது துறையின் கடமை. அந்த வகையில் பொதுசுகாதாரத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து செயல்படும்போது எவ்வித பாதிப்புமின்றி ஒவ்வொரு உயிரையும் எளிதாக காப்பாற்ற முடியும். அதற்கேற்ப அலுவலர்கள் திட்டமிட்டு செயல்படவேண்டும். சரியாக செயல்படும் அலுவலர்களுக்கு என்றுமே பாராட்டுக்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும். அந்த நிலையை எல்லா அலுவலர்களும் பெறுகின்ற வகையில் பணியாற்ற வேண்டும்.

ஒருவருக்கு காய்ச்சல் வரும்பொழுது அது டெங்கு காய்ச்சல் அல்ல. அது மலேரியா அல்லா. அது வைரஸ் காய்ச்சல் அல்ல என்று கூறுவதை தவிர்த்து காய்ச்சல் ஏன் வந்தது, அதைத் தடுப்பதற்கு என்ன வழி என்று திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க முடியும். அதனால் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகள் முழுவதும் ஒருங்கிணைந்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி தினந்தோறும் புகைஅடித்தல் முறையில் மருந்துகள் தெளித்திட வேண்டும். தேவையான உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. குறிப்பாக அலுவலர்கள் தினந்தோறும் பணிகள் நடக்கும் இடங்களுக்கு நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அங்குள்ள நிலை தெரிந்து செயல்படமுடியும்.

மேலும் பணியாளர்கள் அனைவரும் வீடு வீடாகச்சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைகளால் கொசு உற்பத்தி முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களிடையே தொற்றுநோய் பரவாமல் தடுத்திட செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விளம்பரப்பணிகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக தடுத்திட தங்களை முழு அளவில் ஈடுபடுத்தி பணியாற்றிட வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்;, ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர்   பேசுகையில்

மாண்புமிகு மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் முழு ஒத்துழைப்போடு தொடர் நடவடிக்கைகளின் மூலம் தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் கூட தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையிலும் கூட தமிழகத்தில் எவ்வித பாதிப்பு இல்லாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் மூலமும், ஆந்திர மாநிலத்தில் புளு காய்ச்சல் மூலமாகவும் எண்ணற்ற உயிர் சேதங்கள் அடைந்த நிலையில் தமிழகத்தில் சுகாதாரத்தைப் பொருத்தவரை முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டுமுயற்சியுடன் செயல்பட்டு இன்னும் சிறப்பாக சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.

தங்கள் வசிப்பிடங்களில் முற்றிலும் கொசுக்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொசு 1500 முட்டை இடுகிறது. அதைப்போல் பல்லாயிரம் கொசுக்கள் உருவாகினால் சுகாதாரத்தை முற்றிலும் கெடுத்துவிடும். அதனால் கொசுவை ஒரு எதிரியாக நினைத்து எந்த அளவிற்கு ஒழிக்க வேண்டுமோ அந்த அளவிற்கு ஒழிக்க வேண்டும். அதே போல் காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது.அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் மருத்துவர்கள், மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் தொற்று நோய் பரவாமல் தடுத்திட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்திட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்துறையின் சார்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே நிலவேம்பு குடிநீருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசு தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து தடுப்பு நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் பதற்றமடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தாங்களாகவே மருந்துகளை மருந்து கடையில் வாங்கி உட்கொள்வது, அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது தீங்கான விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் விழிப்புணர்வு குறித்து ஊடகங்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அரசு செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.,  பேசுகையில்

கரூரில் இன்று தொற்றுநோய்கள் கட்டுப்படுத்துதல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆறு மாவட்ட கலெக்டர்மற்றும் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பகுதிகளில் காய்ச்சல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. தற்பொழுது உள்ள காய்ச்சல் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் தான். யாரும் பீதியடைய வேண்டாம்.

காய்ச்சல் வந்தால் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. அதே சமயம் பீதியடையவும் தேவையில்லை. இக்காய்ச்சலுக்கு ஆங்கில மருந்துகளுடன் 2012-ல் மாண்புமிகு   முதலமைச்சர்  சித்த மருத்துவமான நிலவேம்பு, மலைவேம்பு மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கும் முறையை செயல்படுத்தி வருகிறார்கள். காய்ச்சல் உள்ள பகுதிகள் துல்லியமாக கணக்கீடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர்அவர்களுடன் சுகாதாரத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்கள் இணைந்து அந்த பகுதிகளில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஏடிஎஸ் கொசுக்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் 100மூ வீடுகளுக்குச் சென்று  மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு குறும்படங்கள் கேபிள் டிவி மற்றும் திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவக்குழு முகாமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அரசு செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.,  தெரிவித்தார். முன்னதாக கரூர் மாவட்ட கலெக்டர்ச.ஜெயந்தி.,  வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சுகாதார உறுதிமொழி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்அர்சனாபட்னாயக்., சேலம் மாவட்ட கலெக்டர்கே.மகரபூசனம்., ஈரோடு மாவட்ட கலெக்டர்எஸ்.பிரபாகரன்., நாமக்கல் மாவட்ட கலெக்டர்வி.தட்சணாமூர்த்தி., திருப்பூர் மாவட்ட கலெக்டர்ஜி.கோவிந்தராஜ்., மருத்துவக்கல்வி இயக்குநர் மரு.கீதாலட்சுமி, பொதுசுகாதாரம் நோய் தடுப்பு பணிகள் இயக்குநர் மரு.குழந்தைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
..............

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து