முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்தி., ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் - ஹிங்கிஸ் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை நேற்று சாம்பியன் பட்டம் வென்றது.
 
இதன் மூலம், இந்தியாவின் 41 வயது மூத்த நட்சத்திர வீரரான லியாண்டர் பயஸ் தனது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசப்படுத்தினார். அதேபோல், ஹிங்கிஸுக்கும் 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது மற்றொரு சுவாரசிய அம்சம். பயஸ் - ஹிங்கிஸ் இணை தன் இறுதிச் சுற்றில், ஃபிரான்ஸின் கிறிஸ்டினா மிளாண்டெனோவிக் - கனடாவின் டேனியஸ் நெஸ்டர் இணையை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் இந்திய - சுவிஸ் இணை 6-4, 6-3 என்ற கணக்கில் ஃபிரான்ஸ் - கனடா இணையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்தப் பட்டத்துக்கு முன்பாக, லியாண்டர் பயஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் 8 பட்டங்களும், கலப்பு இரட்டையரில் 6 பட்டங்களும் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், மார்ட்டினா ஹிங்கிஸ் மகளிர் ஒற்றையரில் 5 பட்டங்கள் உள்பட 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வசப்படுத்தி வைத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து