முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா சந்திப்பின் போது மோடி அணிந்த கோட்: லல்லு கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது பிரதமர் மோடி விலை உயர்ந்த ஆடை அணிந்த விவகாரம் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லல்லூ கிண்டல் அடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்புடைய கோட் என சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து பீகார் முன்னாள் முதல்வர் லல்லூ பிரசாத் யாதவ் கூறியதாவது:

ஏழைகள் அதிகம் வசிக்கும் நாட்டில் பிரதமர் ஒருவர் ஏழைகளால் தயாரிக்கப்படும் காதி ஆடையை அணிய வேண்டும். மாறாக அவர் அணிந்திருந்த கோட் சூட்டை பார்த்தால் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி டிரை கிளீன் செய்து கொண்டு வந்ததைப் போல காணப்படுகிறது. இதனை அவருக்கு யாராவது பரிசாக அளித்திருக்கலாம்.

மேலும் அவர் ஒபாமாவை ஈர்ப்பதற்காக அவ்வாறு அணிந்திருக்கக் கூடும். அது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் எளிமையான உடையுடன், உயர்ந்த எண்ணங்களுடன் பணி செய்வதில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் கிண்டல் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து