முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச ஆலையில் தீ விபத்து: 13 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

டாக்கா - வங்கதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு பணியாறஅறிய 13 பேர் பலியானார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே புறநகர் பகுதியான மிர்பூர் உள்ளது. இங்கு உள்ள மார்க்கெட் பகுதியில் நாசிம் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 70 பேர் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீயின் வெப்பம் தாங்காமல் தொழிற்சைலையின் கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டாக்கா போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலியான 13 பேின் கருகிய உடல்களை மீட்டனர். மேலும், படுகாயம் அடைந்த 57 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்து மின்கசிவு அல்லது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்று டாக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்  என்று தீயணைப்பு துறை தலைவ் ஏகேஎம் ஷகில் நெவாஸ் கூறினார்.

வங்காளதேசத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ஏராளமான தொழிற்சைலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பல நிறுவனங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பலியானார்கள். இதற்கும் காரணம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிற்சாலைகள் செயல்பட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து