முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானிய பிணைக் கைதி தலையையும் துண்டித்தது ஐ.எஸ்.

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ - பிணைக் கைதியாக வைத்திருந்த 2-வது ஜப்பானியர் கென்ஜியின் தலையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்தனர். இது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வந்த அவர்களை பன்னாட்டு ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் அவர்களின் முகாம்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த சில மாதங்களாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதற்கு பழிவாங்கும் வகையில் தங்கள் பிடியில் உள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளனர்.

இதனிடையே, ஐப்பானைச் சேர்ந்த கென்ஜி கோட்டோ ஜோகோ, ஹருனா யுகாவா ஆகிய இரண்டு பிணைக் கைதிகளைக் கொல்வோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. இதில் கென்ஜி கோட்டோ ஜோகோ பத்திரிகை நிருபர். ஹருணா யுகாவா சிரியாவுக்கு சுற்றுலா சென்றவர். இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
 
இவர்களில் ஹருணா யுகாவாவை கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றனர். பின்னர், ஜோர்தான் நாட்டு சிறையில் இருக்கும் தங்கள் சகோதரி சாஜிதா அல் ரிஷவாய் என்பவரை விடுவித்தால் இன்னொரு ஜப்பானியரான கென்ஜி கோட்டோ விடுவிக்கப்படுவார் என்று தீவிரவாதிகள் நிபந்தனை விதித்து காலக் கெடுவும் விதித்தனர்.
அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், அவரைக் கொலை செய்து அதுதொடர்பான வீடியோ பதிவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
 
தங்கள் நாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. இந்த கொடூர செயலுக்கு ஜப்பான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகத் தலைவர்களும் இதை கடுமையாக கண்டித்துள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாதிகள் ஜப்பான் பணயக் கைதி சென்ஜி கோட்டோவை கழுத்தை அறுத்து கொல்லும் காட்சி மிகவும் கொடூரமாக இருந்தது,.   இதுகுறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடூர செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.  

சிரியா ஜோர்டான், ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் அவர்களது செயல்பாடுகளை முடக்கும் அமெரிக்காவின் பணி தொடர்ந்து நடைபெறும் . ஐஎஸ் தீவிரவாதைகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க உட்பட கூட்டணி நாடுகளின் தாக்குதல் ஓயாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம் என்று ஒபாமா கூறிவருகிறார். ஆனால் அவரது தலையையே துண்டிப்போம் என்கிறார்கல் இந்த பயங்கர வாதிகள். இந்த கொடுமைக்கு எப்போது முடிவு வரும் என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து