முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்: விக்னேஸ்வரன் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றுள்ள கே ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்லநிலையை நோக்கிச் செல்லும் என்று ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் வடக்கு மாகாண முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப் பட்டுவந்தது. இந்த சூழ்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44-வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவனை நியமித்துள்ளது. கே.ஸ்ரீபவனுக்கு தலைமை நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் விக்னேஸ்வரன் கூறினார். இலங்கை சட்டக்கல்லூரியில் ஸ்ரீபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதை நினைத்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.

எனினும், நீண்டகால பிரச்சனைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால், தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதல்வர் தெரிவித்தார். சில நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஆக்கப்பட்டு, சிறிதுகாலத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்குள் புகுத்தப்பட்டவர்கள் என்று முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

எனினும், ஸ்ரீபவன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இருந்து, தனக்கு உரிய காலம் வந்தபோதே உச்சநீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமனம் பெற்றுவந்தவர் என்றும் விக்னேஸ்வரன் கூறினார். முந்தைய அரசுாங்கத்தின் ஆட்சியில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாராநாயகா பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்த உடத்திற்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். எனினும் புதிய அரசாங்கம் ஷிராணி பண்டாரநாயகா பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்து, சில தினங்களுக்கு முன்னர் அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது.

 ஆனால், அவர் பணியிலிருந்து சொந்த விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றதை அடுத்து, கே.ஸ்ரீபவன் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து