முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம். மூலமும் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்காக, ஆதார் எண்ணை ஏடிஎம் மூலம் வங்கிக் கணக்குடன் இணைக்கும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டத்தில் இணைய, ஆதார் அட்டை உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க, வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை அளித்து வந்தனர். இந்தப் பணிகள் தாமதமாகி வருகின்றன. ஏற்கெனவே விண்ணப்பித்தும் ஒரு சிலர் தற்போது வரை தங்களது விண்ணப்பங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படவில்லை என புகார் கூறிவருகின்றனர்.
 
எனவே, ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் வாடிக்கையாளர்களே இணைக்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கியில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கவும், நுகர்வோரை விரைவாக நேரடி மானியத்திட்டத்தில் இணைக்கவும் ஏடிஎம் மையங்கள் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் எந்திரத்தில் தங்களது அட்டையை செலுத்தி ரெஜிஸ்ட்ரேஷன் என்ற தொடர்பில் ஆதார் ரெஜிஸ்ரேஷன் என்ற தொடர்பை அழுத்தி தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

இதேபோல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வசதி பெற்றிருப்பவர்கள்  இனிட் என்ற இணையதளத்தில் சென்று லின்க் யுவர் ஆதார் நம்பர் என்ற தொடர்பில் தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு, ஆதார் எண் வங்கியில் இணைக்கப்பட்டதற்கான அடையாள எஸ்எம்எஸ் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என்றார்.

இதேபோல், பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் இந்த சேவையை வழங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து