முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் சிறிசேனா 16ம் தேதி இந்தியா வருகை

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 16ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார்.

இங்கு 2 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மூன்றாவது  றையாக
போட்டியிட்ட ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இருந்த மைத்ரிபால சிறிசேனா அங்கிருந்து விலகி எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்டார். ராஜபக்சே அரசு இந்திய அரசுடன் நெருக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால
சிறிசேனவும் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருப்பதாக ஏற்னவே அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

வருகிற 16ம் தேதி இரண்டு நாள்  சுற்றுபயணமாக இந்தியா வருவார் என  தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த  மாதம்  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்
மங்கள சமரவீர இந்தியா வந்தபோது அகதிகள் நாடு திரும்புதல், தமிழர்களுக்கு மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள்
குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 16ம்
தேதி இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர்மட்ட  தலைவர்களை சந்தித்து பேசுகிறார். 2 நாட்கள் சுற்றுபயணம் செய்யும் அவர் இருநாட்டு உறவு குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

அதற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13ம்  தேதி முதல் 15ம் தேதி வரை இலங்கையில் சுற்றுபயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்திக்கு பிறகு இலங்கைக்கு செல்லும்
முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து