முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் பந்த்: வங்கதேசத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

டாக்கா - வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் 3 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அந்நாட்டில் பள்ளி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆளும் அவாமி கட்சிக்கு எதிராக வங்கதேச தேசியவாத கட்சியின் தலைமையில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலை வங்கதேச தேசியவாத கட்சி புறக்கணித்தது. தேர்தலில் அவாமி கட்சி வெற்றி பெற்று ஷேக் ஹசீனா ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அந்த தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறு தேர்தல் அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதனிடையே 72 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
மேல்நிலை பள்ளிகளுக்கான பொது தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பெற்றோர் விடுத்திருந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்வுகளை வெள்ளிக் கிழமை வரை ஒத்தி வைப்பதாக கல்வி அமைச்சர் நூருல் அறிவித்துள்ளார். இந்த நிலையில் வங்கதேச தேசியவாத கட்சி தலைவர் கலிதா ஜியாவின் வீடும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டிடத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் கலிதா ஜியா வீட்டருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து