முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறுபடை வீடுகளில் இன்று தைப்பூசம்

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர் - திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி திருக்கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்வர்.
 
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் முக்கிய திருவிழாவான தைப்பூச விழா இன்று நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு சென்று அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயிலை வந்தடைகிறார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்து சுவாமி தரசினம் செய்வர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் திருச்செந்தூர் பணிமனையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன். இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். இதே போல் முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து