முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஞ்ஞானி கார்ல் ஜெராஸி மறைவு

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ - குடும்ப கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானி கார்ல் ஜெராஸி காலமானார். அவருக்கு வயது 91.

ஆஸ்திரியாவில் பிறந்த இவர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றார். 1951ல் இவரது தலைமையிலான ஆய்வு குழு நாரத்ரின்ட்ரோன் எனும் மூலக்கூறை கண்டுபிடித்தது. அவருக்கு அப்போது 28 வயது. அந்த மூலக்கூறின் அடிப்படையிலேயே குடும்ப கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரைகள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை என அவர் அழைக்கப்பட்டார்.
 
இந்த மாத்திரையானது ஒரு நாட்டின் பொருளாதார திட்டங்களை வகுக்க உதவியது மட்டுமல்லாமல் பாலியல் உறவுகளிலும் பெண்களின் வாழ்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலகெங்கும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் அறிவியலை விட அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் பல்வேறு தனியார் வேதியியல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார். 1200 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ள அவர் கவிதை தொகுப்புகள், நாடகங்கள், நாவல்களும் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து