முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் 2 அதிகாரிகள் தலை துண்டித்து படுகொலை

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

பாக்தாத் - சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து ஈராக் ராணுவம் போரிட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் குண்டு வீசி தாக்கி வருகின்றன.இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தீவிரவாதிகள் தங்கள் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஜப்பான் பிணைக்கைதிகள் ஹருணா யுகாவா மற்றும் கென்ஜி கோடோ ஆகிய 2 பேரை படுகொலை செய்தனர். இந்த வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை நிலையில் ஈராக்கை சேர்ந்த 2 அதிகாரிகளின் தலையை துண்டித்து தங்கள் வெறியாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இது குறித்த போட்டோக்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.அதில் ஒரு போட்டோவில் கண்கள் கட்டப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளின் முன்பு தெருவில் மண்டியிட்டு உள்ளார்.

அவரது அருகே முகமூடி அணிந்த தீவிரவாதி கையில் வெட்டு கத்தியுடன் நிற்கிறான். அடுத்த போட்டோவில் போலீஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட தலையும், உடலும் கிடக்கிறது.அதே போன்று மற்றொரு படத்தில் மிகவும் குண்டான முகமூடி அணிந்த தீவிரவாதி ராணுவ அதிகாரியை தலை துண்டித்து கொல்ல தயாராக நிற்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் இது போன்று அச்சுறுத்தல் விடுத்தாலும் அமெரிக்கா தலைமையிலான ராணுமும், குர்தீஷ் ராணுவமும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா, ஈராக்கில் பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.இருந்தாலும் மிகப்பெரிய 3 நகரங்கள் தீவிரவாதிகள் வசம் உள்ளன. அவற்றை மீட்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து