முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-அமெரிக்க நட்பு சீன உறவை பாதிக்காது

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவில் கடந்த மாதம் 26- ம்
தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.

அவரது 3 நாள் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு, அணுஆயுத ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 3 நாள் இந்திய பயணத்தினால் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தியா மீது அச்சம் ஏற்பட்டன.

இதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 3 நாள் சீனப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட கால புரிதல் உணர்வு உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். இதனால் சீனா உட்பட பல்வேறு நாடுகளுடனான உறவு பாதிக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

எனது 3 நாள் இந்திய பயணத்தினால் சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டதாக வெளியான அறிக்கைகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அமெரிக்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் நட்புறவை பலப்படுத்தி வருகிறேன். இதில் சீனா அச்சம் கொள்வதற்கான காரணம் எதுவுமில்லை. சீனாவில் அமைதி நிலவுவதையே நாங்களும் விரும்புகிறோம். எனது இந்திய பயணத்தில் சீனாவை சந்தேகப்படவோ, அச்சுறுத்தவோ எதுவுமில்லை என்றும் ஒபாமா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து