முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது.
 
இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக பதவி வகித்தார். அப்போது இவரும், குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது புகார் கூறப்பட்டது. அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறீசேனா வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.

ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்க அவர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அதற்கு நரேந்திர மோடியின் அரசும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை இந்திய நிதித்துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இலங்கை நிதித்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து