முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலீதா ஜியா மீது மேலும் ஒரு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

டாக்கா - வங்கேச முன்னாள் பிரதமர் கலீதா ஜீயா மீது மேலும் ஒரு வழக்கு தலைநகர் டாக்காவில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் 42 பேரின் உயிரிழப்புக்கு கலீசா ஜியாவின் சதியே காரணம் என்ற புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டதாக, அவரது வங்கதேச தேசியக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் 3 பேர் மீதும், வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவேபேருந்து, சரக்கு வாகனத்தீவைப்பு தொடர்பாக கலீதா ஜியா மீது இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஒரு பேரூந்து தீ வைப்பில் 29 பேர் காயமடைந்தனர். மற்றொரு தீவைப்பு சம்பவத்தில் சரக்கு வாகனம் எரிந்து நாசமாகியது. இதைத் தொடர்ந்து, 42 பேர் உயிரிழக்க சதித் திட்டம் தீட்டியதாக கலீதா ஜியா மீது மேலும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து