முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் ரொம்ப நல்லவர்: நடிகர் சத்ருகன் சின்கா

வெள்ளிக்கிழமை, 6 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்கா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கெஜ்ரிவாலின் செயல்பாடுகள் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு நடிகர் சத்ருகன்  சின்கா பதில் கூறுகையில்,
 
‘‘கெஜ்ரிவால் ரொம்ப நல்ல மனிதர். அதில் சந்தேகமே வேண்டாம். அவருக்கு டெல்லி மக்கள் மத்தியில் நல்ல  கிளீன் இமேஜ் இருக்கிறது’’ என்றார்.அடுத்த வினாடி அவர் சுதாரித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம்,  ‘‘பாரதீய ஜனதாவின் முதல் – மந்திரி வேட்பாளர் கிரண்பேடிக்கும் டெல்லி மக்களிடம் வரவேற்பு இருக்கிறது.
அவருக்கு என்று ஒரு தனி இமேஜ் உள்ளது. இதை யாராலும் மறுக்க  முடியாது’’ என்று  சமாளித்தார்.கெஜ்ரிவாலை புக சின்கா பேசியது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து