முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் சகோதரர்களின் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் வரும் மார்ச் மாதம் 2ம் தேதி ஆஜராகும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு வரும் 9ம் தேதி விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை மட்டும் விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கு தொடர்பு இல்லாத ஏர்செல், மேக்சிஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாறன் சகோதரர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் கோபால் கவுடா, பானுமதி ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாறன் சகோதரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், இந்த வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. வேண்டுமானால் மனுதாரர்கள் டெல்லி ஐகோர்ட்டை அணுகலாம்.

உங்கள் மனுவை நிராகரிக்கிறோம் என்றனர். இதையடுத்து மாலையில் சிபிஐ தரப்பில் கூறப்பட்ட வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மாறன் சகோதரர்கள் மனுவை நிராகரித்து காலையில் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டனர். பின்னர் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு 9ம் தேதி(நாளை) விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து