முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 கோடியை திரும்ப கொடுக்க மோகன்லால் வீட்டுக்கு சென்ற சாண்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் - திருவனந்தபுரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா பிரம்மாண்ட முறையில் கடந்த 30ம் தேதி நடந்தது. நடிகர் மோகன்லால் பங்கேற்ற லாலிசம் என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல பாடகர்களும் பங்கேற்றனர்.

இந்த கலைநிகழ்ச்சி பொதுமக்களை கவரவில்லை என்றும் பாடகர்கள் மேடையில் பாடாமல் பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு வாயை மட்டும் அசைத்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் மோகன்லாலை கண்டித்து இணையதளங்களில் கருத்துக்களும் பரவியது. இந்த நிலையில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக தான் பெற்ற ரூ. ஒரு கோடியே 63 லட்சத்தை செக் மூலம் கேரள அரசுக்கு மோகன்லால் திருப்பி அனுப்பி வைத்தார்.
 
அந்த பணத்தை அரசு திரும்ப பெற்று கொள்ளாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார். பணத்தை திரும்ப பெற மாட்டேன் என்று மோகன்லாலும் திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், விளையாட்டு மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும் கொச்சியி்ல் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டுக்கு நேரில் சென்றனர்.

அவர்கள் மோகன்லாலிடம் பணத்தை திரும்ப பெற்று கொள்ளுமாறு வற்புறுத்தினர். ஆனால் சர்ச்சை ஏற்பட்டதால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக மோகன்லால் அவர்களிடம் தெரிவித்தார். சுமார் 15 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு உம்மன் சாண்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பு பற்றி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, மோகன்லால் திரும்ப பெற மறுத்த தொகையை அவரது விருப்பப்படி நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தலாமா? அல்லது முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்கலாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து