முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணம்: 60 பேருக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியது

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 60 பேருக்கு எதிரான நடவடிக்கை  தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
 
கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் முன்னாள் நீதிபதி ஷா  தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களையும், அது தொடர்பான வங்கி கணக்குகளையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஷா மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இந்த சூழலில் வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்திய தொழில் அதிபர்கள் 60 பேரின் பெயர் விபரங்களை வெளியிடப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த 60 பேரின் கணக்கில் சுமார் ரூ.1500 கோடிக்கும்  அதிகமாக பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்கள் வரி ஏய்ப்பு செய்து பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய 627 பேரின் பெயர் பட்டியலை கடந்த அக்டோபர்  மாதம் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் டாபர் நிறுவனத்தின் பிரதீப் பர்மன் உள்ளிட்ட 3 பேர் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன. கருப்பு பணம் பதுக்கிய 627 பேரில் 200 பேர் சிறப்பு புலனாய்வு குழு  விசாரணைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதில் 100 பேரின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்யும் பணி முடிவடைந்துவிட்டதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே மார்ச் இறுதிக்குள் முதல் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கருப்பு பணம் பதுக்கிய 60 பேர் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆறேழு மாதங்களில் அதற்கான அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து ஏற்கனவே அரசுக்கு தெரியும். சில புதிய பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாவோசில் சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, கருப்பு பணம் பதுக்கியவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனவே விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பழைய நபர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்றும் புதிய நபர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து