முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்கறி விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

மதுரை - காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு காய்கறிகள் விலை உயர்ந்திருந்தன. அதன் பின்னர் படிப்படியாக விலை குறைந்து தற்போது மிகவும் மலிவாக விற்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாட்டுத்தாவணி சந்தையில் கிலோ தக்காளி ரூ. 10, கத்தரிக்காய் ரூ. 15, உருளை ரூ. 15, கேரட் ரூ. 20, பெரிய வெங்காயம் ரூ. 22, சிறிய வெங்காயம் ரூ. 25 முதல் ரூ. 30, காலிபிளவர் பூ ஒன்று ரூ. 10 முதல் ரூ. 15, பச்சை மிளகாய் ரூ. 15 என பெரும்பாலான காய்கறிகளின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டன.

இதில் பட்டர்பீன்ஸ், பஜ்ஜி மிளகாய் போன்ற ஒரு சில காய்கறிகளின் விலை ரூ. 30 ஆக உள்ளன. இருந்த போதும் ஒட்டுமொத்தமாக காய்கறி விலை குறைந்துள்ளன. குறிப்பாக தக்காளி விலை மிகவும் மலிந்துள்ளது. தை மாத தொடக்கத்தில் இருந்தே விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தேனி, போடி, கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் விளையும் காய்கறிகள் இங்கு வருகின்றன.

கடந்த முறை நல்ல மழை பெய்து கிணறுகளில் தண்ணீர் இருந்ததால் விவசாயிகள் காய்கறிகளை அதிகளவில் பயிர் செய்தனர். இதனால் விலை குறைந்தது. எனவே இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என மாட்டுத்தாவணி அனைத்து கட்டாய கடை காய்கறி வியாபாரிகள் சங்க செயலர் தியாகராஜன் தெரிவித்தார். தக்காளியை பொருத்தவரையில் இன்னும் விலை குறையக் கூடும் என தக்காளி மொத்த வியாபாரி சேகர் தெரிவித்தார். காய்கறி விலை குறைவால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து