முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானை வென்றது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

அசிலெய்ட் - அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, எளிதில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

ஷிகர் தவன் மீண்டும் கால்களை நகர்த்தாமல் ஆடுவதன் பலனை பெற்றார். ஹமித் ஹசன் வீசிய  பந்தில் அவுட் ஆனார். அடுத்தபடியாக  விராட் கோலி 5 ரன்கள் எடுத்த ,வெளியேறினார். 16/2 என்ற நிலையில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரஹானே ஆகியோர் அதிரடி முறையில் விளையாடி ஸ்கோர் விகிதத்தை உயர்த்தினர்.

குறிப்பாக ரெய்னாவும், ரோஹித்தும் 3-வது விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 158 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா ஆப்கான் பவுலர்களை அதன் பிறகு அடித்து ஆடத் தொடங்கினார். மொத்தம் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்களை அடித்த ரோஹித் சர்மா 122 பந்துகளில் 150 ரன்கள் என்று ஒரு இரட்டைச் சதத்திற்குத் தயாராக இருந்த போது 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டமிழந்தார். முன்னதாக ரெய்னா 71 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியிலும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

ரஹானேயும் ரோஹித் சர்மாவும் இணைந்து 95 ரன்களை 11 ஓவர்களில் சேர்த்தனர். ரஹானே 61 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இந்தியா அணி 365 ரன்களை குவித்தது. 365 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் என்று முடிவடைந்தது.

இலக்கைத் துரத்திய ஆப்கான் தொடக்க வீரர்களான ஜாவேத் அஹ்மதி (17), உஸ்மான் கனி (44) கொஞ்சம் விரைவு ரன் குவிப்பில் இறங்கினர். பந்து வீச்சு இந்தத் தருணங்களில் இலக்கற்று இருந்தது. இதனால் 4.4 ஓவர்களில் 30 ரன்களை எட்டினர் ஆப்கானிஸ்தான்.

அஹ்மதி, கனி ஆகியோருக்குப் பிறகு நவ்ரோஸ் மங்கல் (60 ரன், 85 பந்து 2 பவுண்டரி 2 சிக்சர்) என்று அனாயசமாக விளையாடினார். மங்கலும் ஆட்டமிழந்த பிறகு தேவை ரன் விகிதம் அதிகரிக்க அந்த அணி 50 ஓவர்கள் தாக்குப் பிடித்து 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து