முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட் கலைநிகழ்ச்சிகள் தொடக்கம்

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

கிறைஸ்ட் சர்ச் - உலக கோப்பை தொடக்க விழா நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது. ஒவ்வொரு நாட்டுகுழுவும் தங்களது கலைநிகழ்ச்சிகளை ரசிகர்கள் முன்பு நிகழ்த்தி காண்பித்தனர்.

இலங்கை சார்பில், அந்த நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலையில் கிரீடம் வைத்துக் கொண்ட பெண்கள் இரு குழுவாக ஆடினர். ஒரு குழு நீல வண்ணத்திலும் மற்றொரு குழு சிவப்பு வண்ணத்திலும் ஆடை அணிந்து புன்முறுவலுடன் ஒய்யார ஆட்டம் போட்டனர்.

இந்தியா சார்பில் நடத்தப்பட்ட நடனத்தின்போது. ஹிந்தி பாடலுக்கு ஆண்களும், பெண்களும் வேகமான நடன அசைவுகளுடன் குத்தாட்டம் போட்டனர். இந்திய தேசிய கொடி பின்னணியில் பறக்கவிடப்பட்டிருந்தது. வங்கதேசம் சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் சீருடையை டி சர்ட்டாக போட்டு ஆட்டம் போட்டனர். இந்த குழுவிற்கு பெண் ஒருவர் தலைமை தாங்கினார். பின்னணியில் வங்கதேச கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான்  டான்ஸ் ஆடாமல் பாடல்கள் பாடி அசத்தினர்.  இருவர் நின்று கோரஸ் பாடினர். சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்து பாகிஸ்தான் தேசிய கொடியை கையில் கொடுத்து நடக்க விட்டனர். தென் ஆப்பிரிக்காவின் சார்பில் டிரம்ஸ் நடனம் என்ற ஆதிவாசி நடனம் நடத்தப்பட்டது. இரு வாலிபர்கள் வந்து பேண்ட் மட்டும் போட்டபடி ஆடினார்கள்.

ஸ்காட்லாந்து சார்பில் பேக்பைப் வாத்திய குழுவினர் வாசிப்பு நிகழ்த்தினர். நியூசிலாந்தின் மவுரி எனப்படும் பாரம்பரிய நடனம் மக்களை பெரிதும் கவர்ந்தது. அந்த நடனத்தின் ஒலியும், அசைவுகளும் அச்சுறுத்துவதை போல இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டை பொருத்தளவில் கலீஜி எனப்படும் ஒரு நடனத்தை நிகழ்த்தி காண்பித்தனர். மூன்று பெண்கள் உடலை நைட்டி போன்ற ஆடையால் முழுவதுமாக மூடியபடி தலைமுடியை சுழற்றியபடி ஆடினர். கிட்டத்தட்ட சில அசைவுகள் 'பெல்லி டான்சை' நினைவுபடுத்துவதாகவும் இருந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் பாப் பாடல் அரங்கேற்றப்பட்டது. ஆனால், குத்தாட்டம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் குழுவோ, டிரம்ஸ் வாசித்து கடுப்படித்தது. இறுதியில் பல வண்ண வானவேடிக்கைகள் இரு நகரங்களையும் அதிர செய்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து