முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமிரா

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி கோவிலிலும், திருப்பதி நகர பகுதிகளிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளனர்.

திருப்பதியில் 184 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், செயின் பறிப்பு கொள்ளையர்கள் ஏராளமானோர் சிக்கினர். இதையடுத்து திருப்பதியில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமிராவை 600ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பைலட் பிராஜக்ட் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வீடியோ அனலட்டிக் சாப்ட்வேர் பொருத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வாகனம் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு இடத்தில் அதிக நேரம் நின்றால் இந்த சாப்ட்வேர் மூலம் அலாரம் அடித்து காண்பித்துவிடும். மேலும் குற்ற வழக்குகளில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள், கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். அந்த படத்தில் இருப்பவர் கண்காணிப்பு கேமிரா எல்லை பகுதியில் எங்காவது நடமாடினால் உடனே அந்த சாப்ட்வேர் காட்டி கொடுத்து விடும். இதன் மூலம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். விரைவில் இந்த கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து