முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனேகன் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் தனுஷ் நடித்துள்ள அனேகன் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
 
புதிரை வண்ணார் விடுதலை இயக்கத்தின் தலைவர் கி.ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் தனுஷ் நடித்துள்ள அனேகன் திரைப்படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், வண்ணார் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வசனம் இடம்பெற்றுள்ளது. எனவே, வண்ணார் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வசனத்தை படத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.
 
இல்லையெனில் வசனத்துடன் கூடிய படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தணிக்கை வாரியம் தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, அனேகன் படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனத்தை படத்தின் இயக்குநர் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
 
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வெள்ளிக்கிழமை வெளியாகும் படத்தை மனுதாரர் பார்வையிட்டு, சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதா? வேறு ஏதாவது வசனங்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தலாம் என உத்தரவிட்டார். இதையடுத்து பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து