முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: பாக்.,கை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றியை ருசித்தது.
 
உலகமே ஆவளோடு எதிர்பார்த்த இந்த போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி 300 ரன்களை குவித்தது. 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்களையும் மளமளவென இழந்து 224 ரன்களில் சுரூண்டது. 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகிறார்கள்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக இந்திய துணைக் கேப்டன் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷிகார் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் அபாரமான பேட்டிங் பங்களிப்பால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. நிதானமான துவக்கத்தைத் தந்தாலும், பின்னர் இந்திய அணி வீரர்கள் விளாசத் தொடங்கினர். ஆனால், கடைசி ஓவர்களில் சொதப்பலான ஆட்டத்தால் ரன் குவிப்பு வேகம் சற்று தடைப்பட்டது.
 
அடிலெய்டில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவண், ரோகித் சர்மா களமிரங்கினர். துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 20 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், சோஹாலி கான் பந்துவீச்சில் மிப்ஸாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக பேட் செய்து வந்த ஷிகார் தவண் 76 பந்துகளில் 73 ரன்கள் குவித்த நிலையில், மிஸ்பா உல் ஹக்கின் சாதுரிய செயல்பாட்டால் ரன் அவுட் ஆனார். தவணின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு உறுதுணையாக அமைந்தது. தவணுடன் இணைந்து பொறுப்புடனும் சற்று அதிரடியாக பேட் செய்த துணைக் கேப்டன் விராட் கோலி, 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இவரது சதமும் அணிக்கு மிகுந்த பலம் சேர்த்தது. இவரது விக்கெட்டையும் சோஹாலி கான் பறித்தார்.
 
தவண் ஆட்டமிழந்த பிறகு, கோலியுடன் இணைந்த சுரேஷ் ரெய்னா ஆரம்பம் முதலே அதிரடியாக பேட் செய்தார். அவர் 54 பந்துகளில் 74 ரன்கள் குவித்த நிலையில், சோஹாலி கான் பந்துவீச்சில் ஹாரிஸ் சோஹாலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னாவுக்குப் பின் தோனி 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 3 ரன்களில் வெளியேறினார். ரஹானே ரன் ஏதும் எடுக்கவில்லை. அஸ்வின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னும், ஷமி ஆட்டமிழக்காமல் 3 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சோஹாலி கான் மிகச் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். வஹாப் ரியாஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு 301 ரன்கள் என்ற சற்றே சவலான வெற்றி இலக்கை இந்திய இணி நிர்ணயித்தது. இதை விரட்டிய பாகிஸ்தான் ஆரம்பித்தில் நிதானமாக ஆடியது. 3.2-வது ஓவரில் முகமது ஷமியின் அபாரப் பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், யூனிஸ் கான். அவர் 10 பந்துகளில் 6 ரன்களே சேர்த்திருந்தார். அதேவேளையில், அகமது ஷெகாவத் உடன் ஹாரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்ததும் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்தது.

ஹாரிஸ் சோஹைல் 48 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அகமது ஷெஹாவத் 73 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சோயிப் மக்ஸூத் ரன் ஏதும் எடுக்காமல், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
24.4-வது ஓவர் பந்தில் உமர் அக்மல் பேட்டை உரசியவாறு சென்ற கேட்சைப் பிடித்தார் தோனி. ஆனால், நடுவர் அவுட் தரவில்லை. இதையடுத்து, தோனி மறுபரிசீலனை கோரினார். அதையடுத்து, முன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஜடேஜா பந்துவீச்சில் உமகர் அக்மல் ரன் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

அதைத் தொடர்ந்து, மிஸ்பா உல் ஹக்-கும் அப்ரிதியும் சற்றே அதிரடியாக பேட் செய்து, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை மிரட்டத் தொடங்கினர். எனினும், 34.1-வது ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கோலியிடம் அப்ரிதி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், இந்தியா மீண்டும் ஏற்றம் கண்டது. அப்ரிதி 22 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வஹாப் ரியாஸ் 4 ரன்களில் முகமது ஷமியின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 42.5-வது ஓவரில் மோஹித் சர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து யாசிர் ஷா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார். எதிர்முனையில் சகவீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட் செய்த மிஸ்பா உல் ஹக், 84 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில், முகமது ஷமி பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக, மோஹித் ஷர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து சோஹாலி கான் ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்கள் எடுத்திருந்தார். இர்ஃபா ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார். இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பவுலிங்கிலும் திறமையான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது பெருமையளிக்கிறது என்று தனது டுவிட்டர் தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். இதே போல் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இதற தலைவர்களும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த மாபெரும் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து