முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊதிய உயர்வுப் பிரச்சனை: நிதி அமைச்சர் தலையிட கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

வதோதரா - வங்கி ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்தத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில,் ஊதிய உயர்வு பிரச்சனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலையிட வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கம் ஒன்றின் மூத்த தலைவர் கோரிக்கை எழுப்பியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய உயர்வுப் பிரச்சனை தொடர்பாக, வரும் 25ம் தேதி முதல் நான்கு நாள்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு பொதுத் துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றி வரும் அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:

வங்கித் துறையின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கையெழுத்தாவது வழக்கம். கடைசி 5 ஆண்டுகள் 2012ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தன. ஆனால் இன்று வரை மறு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. எனவே, ஊதிய உயர்வு கேட்டு வரும் 25ம் தேதி முதல் 4 நாள்கள் வேலைநிறுத்தமும், அடுத்த மாதம் 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் மேற்கொள்ள உள்ளோம்.

அதற்கு முன்பு இந்த பிரச்சினையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார். இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கு 13 சதவீத ஊதிய உயர்வு அளஇப்பதற்கு இந்திய வங்கிகள் சங்கம் முன்வந்துள்ளது. ஆனால் ஊழியர் சங்கங்கள் 19 சதவீதம் வேண்டும் என்று கோரி வருகின்றன. 27 பொதுத் துறை வங்கிகளில் நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து