முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் யுவராஜ் சிங்

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ்சிங்கை ரூ.16 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 8வது ஐபிஎல் சீசனுக்கான, வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் முதல் வீரராக சென்னைக்காக விளையாடி வந்த முரளி விஜய் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஏலம்போனார்.
 
இந்த ஏலத்தில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால், யுவராஜ்சிங்கை ரூ.16 கோடிக்கு டெல்லி அணி வாங்கியதுதான். யுவராஜ்சிங்கை பெங்களூரு அணி கடந்த ஏலத்தின்போது ரூ.14 கோடி கொடுத்து வாங்கியது. அந்த ஏலத்தின்போது அதிக தொகை பெற்றவர் என்ற பெருமையை யுவராஜ்சிங்தான் பெற்றார். ஆனால் மோசமான ஃபார்ம் காரணமாக, அவரை கழற்றிவிட்டது பெங்களூரு அணி.

உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அடிமேல் அடிபட்டுக் கொண்டிருந்த யுவராஜ்சிங்கை 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் டெல்லி அணிக்காக விளையாடிவந்தார். அவரை டெல்லி அணி கழற்றிவிட்ட நிலையில் பெங்களூரு அணி ரூ.10.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச்சை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு வாங்கியுள்ளது. இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கனை ஹைதராபாத் அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து