முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஜப்பான் ரூ.1300 கோடி நிதி

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ - ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை வளர்த்து வரும் ஐஎஸ் அமைப்பை ஒடுக்க ஜப்பான் ரூ. 1300 கோடி நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்டு சிரியா எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஈராக் மற்றும்  சிரியாவில் சில பகுதிகளை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள  கிறிஸ்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். மேலும் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் ஷியா பிரிவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மத்திய கிழக்கு  நாடுகளில் மட்டும் அல்லாது ஆப்ரிக்க நாடுகளிலும் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் செயல்பாடுகளை  விரிவு படுத்த வருகின்றனர். எகிப்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை வெட்டிக் கொல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.  கடந்த மாதம் ஐப்பானை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களின் கழுத்தை அறுத்து கொன்றனர். 

ஜோர்டர்ன் விமானி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்படும் காட்சிகளும் ஐஎஸ் தீவிரவாதிகளால் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ரூ. 1200 கோடி நிதி ஒதுக்குவதாக ஜப்பான் பிரதமர் அபே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேலும் ரூ. 100 கோடி ஒதுக்குவதாக நேற்று  அறிவித்தார். இந்த நிதி உதவி ஐஎஸ் தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு  வழங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து