முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்தை வென்று 2-வது வெற்றியை பெற்றது நியூசிலாந்து

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

டுனெடினில் - டுனெடினில் நேற்று நடைபெற்ற ஸ்காட்லாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து அணித் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது.
மீண்டும் 5-வது ஓவரில், 2 விக்கெட்டுகள் விழுந்தது. இம்முறை டிம் சவுதீ வீசிய லெக் திசை பந்தை கூயெட்சர் மிட்வீக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தே ஸ்காட்லாந்து கேப்டன் மாம்சென் இன்ஸ்விங்கரில் எல்.பி ஆனார். மீண்டும் ஹேட்ரிக் வாய்ப்பு இம்முறை பெரிங்டன் தடுத்தாடினார். ஸ்காட்லாந்து 12/4 என்று ஆனது.

அதன் பிறகு மேட் மேச்சன் (56), பெரிங்டன் (50) இணைந்து 23 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு மேச்சன், பெரிங்டன் இருவரையும் கோரி ஆண்டர்சன் வீழ்த்த கடைசி விக்கெட்டுகளை டேனியல் வெட்டோரி கைப்பற்ற ஸ்காட்லாந்து கதை 36.2 ஓவர்களில் 142 ரன்களுடன் முடிந்தது. உணவு இடைவேளைக்கு முன்னரே ஸ்காட்லாந்து ஆல் அவுட். நியூசிலாந்து தரப்பில் வெட்டோரி, ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சவுதீ, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மிகச்சிறிய வெற்றி இலக்கை எதிர்த்து நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் ஸ்காட்லாந்து அணியிடம் இவ்வளவு தீவிரத்தை எதிர்பார்க்கவில்லை. எனவேதான் 21 ஓவர்களில் நியூசிலாந்து 117/5 என்று ஆனது. நல்ல பவுன்ஸ் இருந்ததால் பேட்ஸ்மென்கள் கவனத்துடன் ஆட வேண்டிய நிலை இருந்தது. கவனம் தப்பினால் அவுட் என்ற நிலையே இருந்தது. மீண்டும் கேன் வில்லியம்ஸ் 38 ரன்களையும், கிராண்ட் எலியட் 29 ரன்களையும் எடுத்தனர்.

ஸ்காட்லாந்து வேகப்பந்து வீச்சாளர் வார்ட்லா கப்திலுக்கு அருமையான பந்தை வீசி அவரை எட்ஜ் செய்ய வைத்தார். ஆனால் கப்தில் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்துவிட்டார். மெக்கல்லம் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் வார்ட்லா பந்தை ஷாட் ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கிராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஸ் டெய்லர் ஹக் என்பவரது பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். 18-வது ஓவரில் கேன் வில்லியம்சன் 38 ரன்கள் எடுத்து டேவி பந்தை மிகப்பெரிய டிரைவ் ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு வி.கீப்பரிடம் கேட்ச் ஆனது. நியூசிலாந்து 106/4.

வார்ட்லா பந்து வீச வந்து கிராண்ட் எலியட்டை (29) நல்ல பந்துக்கு எட்ஜ் செய்ய வைத்தார். 117/5 என்ற நிலையில், கோரி ஆண்டர்சன் டீப் ஃபைன் லெக்கில் கொடுத்த கேட்ச் கைக்கு நேராக வந்தது ஆனால் அதனை வார்ட்லா தவறவிட்டார். அந்த நேரத்தில் அந்த கேட்சை எடுத்திருந்தால் நியூசி.க்கு திண்டாட்டம் அதிகரித்திருக்கும். ஆனால் ஆண்டர்சன் நீண்ட நேரம் நீடிக்கவில்லை 11 ரன்களில் அவர் பிளிக் ஷாட்டில் அதே ஃபைன்லெக்கில் கேட்ச் கொடுத்தார். இம்முறை வார்ட்லா தவறு செய்யவில்லை. இவர் அவுட் ஆன அதே ஓவரிலேயே லுக் ரோஞ்சி 12 ரன்களில் இருந்த போது டேவி பந்தை தூக்கி அடித்து மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடைசியில் டேனியல் வெட்டோரி (8) வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஸ்காட்லாந்து தரப்பில் வார்ட்லா 3 விக்கெட்டுகளையும், டேவி 3 விக்கெட்டுகளையும்கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து