முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க பந்து விச்சாளர் டெல் ஸ்டெய்னுக்கு காய்ச்சல்

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - தோண்டை வலி காய்ச்சல் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து விச்சாளருமான டேல் ஸ்டெய்ன் அவதிப்படுகிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி வரும் ஞாயிறன்று நடைபெறுவதையடுத்து அவர் உடல் நலம் தேறுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஜிம்பாப்வேயிற்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 9 ஓவர்களில் 64 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்தப் போட்டிக்குப் பிறகு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

இந்நிலையில் அவருக்கு ஃபுளூ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார என்ற ஐயம் எழுந்துள்ளது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகர் மைக் ஹஸ்ஸி, மற்றும் கேரி கர்ஸ்டன் ஆகியோர் முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி செயிண்ட் கிட்லா கிளப் மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து