முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: ஆப்கானை வென்றது வங்காளதேசம்

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

கான்பெரா - உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பிரிவு ஏ வில் நடைவெற்ற போட்டிய்ல் ஆப்கானிஸ்தானை அபாரமாக வென்றது வங்காளதேசம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 267 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
உலக கோப்பையில், குரூப் ஏ-விலுள்ள வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
டாசில் வெற்றி பெற்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் அனாமுல் ஹாக் 29 ரன்களிலும், தமிம் இக்பால் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதைத் தொடர்ந்து சவும்யா சர்க்கார் 28, மமுதுல்லா 23, ஆகியோரும் அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் 30வது ஓவரில் வங்கதேசம் 119 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் ஷகிப் அல் ஹசன் 63 ரன்களும், முஷாபிர் ரஹிம் 71 ரன்களும் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் வங்கதேசம் மீண்டது. இறுதியில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வங்கதேசம் கடைசி ஓவரில் 267 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கன் தரப்பில் ஹமீத் ஹாசன், ஷப்பூர் ஜர்டான், அப்டாப் ஆலம், மிர்வாயிஸ் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜாவீத் அகமது, அப்சர் ஜசாய் மற்றும் அஸ்கர் ஸ்டைனிக்சாய் ஆகியோர் தலா 1 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.இருப்பினும் நவ்ரோஸ் மங்கல் 27 ரன்கள், சமுல்லா சென்வாரி 42 ரன்கள், கேப்டன் முகமது நபி 44 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

இருப்பினும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். எனவே 42.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மஸ்ரப் மொர்டசா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேசம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த உலககோப்பை போட்டி மற்றும் இந்த உலக கோப்பையின் முதல் ஆட்டம் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது வங்கதேசம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து