முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் சிறீசேனா திருப்பதியில் சாமி தரிசனம்

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

திருமலை - இலங்கை அதிபர் சிறீசேனா 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் பீகாரில் உள்ள புத்தகயாவுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் விமானத்தில் திருப்பதி புறப்பட்டார். ரேணிகுண்டா வந்திறங்கிய அவர் பின்னர் கார் மூலம் திருமலை சென்றார்.

ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் இரவு தங்கினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். சிறீசேனாவுடன் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிகள் என 42 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கோவிலில் அவருக்கு பட்டு வஸ்திரம், ஏழுமலையான் புகைப்படங்கள், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் காரில் ரேணிகுண்டா வந்து அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார்.

சிறீசேனா வருகையையொட்டி திருமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறீசேனா செல்லும் வழிநெடுகிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து