முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர் மீது தாக்குதல்: அமெரிக்கா மன்னிப்பு கேட்டது

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - இந்தியர் மீது போலீசார் தாக்கிய விவகாரத்தில் அ்மெரிக்கா மன்னிப்பு கேட்டது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாய் பட்டேல். இவர் அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள தனது மகன், மருமகள் மற்றும் பிறந்த பேரக் குழந்தையை பார்க்க சென்றிருந்தார். வெளியே வாக்கிங் சென்ற போது அவரை வழிமறித்து விசாரித்த போலீசார் தீவிரவாதியை போன்று அவரை ணடக்கி பிடித்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கினார்கள்.

இதனால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது அலபாமா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனிவெறி தாக்குதல் என தெரிவித்தனர். இந்தியாவும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதை தொடர்ந்து மாடிசன் நகர போலீசார் தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். இந்த நிலையில் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டதற்கு இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டுள்ளது. அலபாமா மாகாண கவர்னர் அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் இந்தியா சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டதற்கு வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும் என்று இந்திய அரசுக்கு உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து