முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட தடை உத்தரவிற்கு எதிர்ப்பு

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிபர் ஒபாமாவின் சிறப்பு அதிகார சட்டத்துக்கு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை எதிர்க்க ஒபாமா முடிவு செய்துள்ளார்.
 
அமெரிக்காவில் குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தி வரும் குடியரசு கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கிறது. இந்த சூழலில் அந்த நாட்டில் குடியேறி உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்போரை நாட்டை விட்டு வெளியேற்றாமல் பாதுகாக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் ஒபாமா அண்மையில் பிறப்பித்தார்.
 
இந்த நிலையில் ஒபாமாவின் அந்த உத்தரவுக்கு டெக்ஸாஸ் மாகாணத்தின் பிரான்ஸ்வில் மாவட்ட நீதிபதி இடைக்கால தடை விதித்தார். இது குறித்து ஒபாமா கூறியதாவது,

சட்டத்துக்குட்பட்ட அரசின் நடவடிக்கைகளுக்கு மாவட்ட நீதிமன்றங்கள் தடை விதிப்பது புதிதல்ல. அமெரிக்க வரலாறும், சட்டமும் எனது சிறப்பு அதிகார உத்தரவுக்கு சாதகமாகவே உள்ளன என்றார். அமெரிக்காவில் இந்தியர்கள் உட்பட சுமார் 1.1. கோடி பேர் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்ற அல்லது அமெரிக்காவில் வசிக்கும் குழந்தைகள் இருப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாமல் பாதுகாப்பதற்கான உத்தரவை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அதிபர் ஒபாமா தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு இறுதியில் பிறப்பித்தார். 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் குடியேற்றவாசிகளின் வாக்கு வங்கியை கவர்வதற்காகவே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து