முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை போட்டி ஒளிபரப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்ப டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. ஸ்டார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து பிரசார் பாரதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப புதிய சேனல் ஒன்றை தொடங்க முடியுமா? என்று பிரசார் பாரதியிடம் அன்று சுப்ரீம் கோர்ட் கேட்டு இருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப புதிய சேனல் உருவாக்க முடியாது என்று பிரசார் பாரதி பதில் அளித்தார். விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து