முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரிட்சை

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

கிறிஸ்சர்ச் - உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. கிறிஸ்ட் சர்ச் நகரில் நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் தோற்றன. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் வீழ்ந்தது. அயர்லாந்திடம் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும்.
பாகிஸ்தான் அணியில் யூனுஸ்கான், ஷேசாத், மிஸ்பா உல் ஹக், அப்ரிடி, உமர் அக்மல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் வகாப் ரியாஸ், சோகைல்கான் போன்றோர் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ்கெய்ல், சாமுவேல்ஸ், சிம்மன்ஸ், டாரன்சேமி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருந்த போதிலும் பந்து வீச்சில் சோபிக்காததால் அயர்லாந்திடம் தோல்வி ஏற்பட்டது. எனவே பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது வெஸ்ட் இண்டீசுக்கு அவசியம். இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பிரிஸ்பேனில் நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தையும், வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி உள்ளன. இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கிளார்க் இன்று களம் இறங்குவார் என்று தெரிகிறது. அந்த அணியில் வார்னர், பிஞ்ச், வாட்சன், மிச்செல் மார்ஷ், ஜான்சன், ஸ்டார்க் போன்ற அபாயகரமான வீரர்கள் உள்ளனர்.

வங்காளதேச அணியில் தமீம் இக்பால், ஷகீப் அல்ஹசன், முகுஷ்பிர் ரகீம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருந்தாலும் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்காளதேசம் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். பிரிஸ்பேன் நகரில் மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து