முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி., எதிரான போட்டி: இங்கி., 123 ரன்கள் எடுத்து தோல்வி

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் - நியூசிலாந்து வீரர் மெக்கல்லமின் சரவெடியில் சரிந்தது இங்கிலாந்து அணி. 123 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று வெலிங்டன் நகரில் நடந்த 9வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.

இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. நியூசிலாந்து அணி இலங்கை, ஸ்காட்லாந்தை வீழ்த்தி இருந்தது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக இயன்பெல், மொய்ன் அலி களம் இறங்கினர். நியூசிலாந்து வேகப்பந்து வீரர் டிம் சவுத்தியின் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி திணறியது. தொடக்க வீரர்கள் இயன்பெல்(8 ரன்), மொய்ன் அலி(20 ரன்) ஆகியோர் சவுத்தி பந்தில் போல்டு ஆனார்கள். அடுத்து வந்த கேரிபேலன்சை(10 ரன்) போல்ட் வெளியேற்றினார். அதன் பின் கேப்டன் மார்கன் - ஜோரூட் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது.

மார்கன் 17 ரன்னில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 104 ரன்னாக இருந்தது. அதன் பின் சவுத்தி பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் சரிந்தன. அவரது பந்தில் ஜேம்ஸ் டெய்லர்(0), பட்லர்(3), வோக்ஸ்(1), பிராட்(4), பின்(0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி விக்கெட்டாக ஜோரூட் அவுட்டானார். அவர் அதிகபட்சமாக 46 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 33.2 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 7 விக்கெட் கைப்பற்றினார். போல்ட் மிசின், வெட்டோரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 124 ரன் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் மேக்குல்லம், குப்தில் களம் இறங்கினர். இதில் மேக்குல்லம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் பிடித்த 2வது பந்தில் சிக்சர் அடித்த அவர் இங்கிலாந்து பந்து வீச்சை துவைத்து எடுத்தார். ஸ்டீவன் பின் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

மேக்குல்லம் 18 பந்தில் அரை சதம் அடித்தார். இது உலக கோப்பையில் அதிவேக அரை சதம் ஆகும். ஸ்டீவன் பின் ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர் அடித்து அசத்தினார். 6.4 ஓவரில் நியூசிலாந்து அணி 100 ரன்னை தொட்டது. மேக்குல்லம் 77 ரன்னில் அவுட்டானார். 25 பந்தில் இந்த ரன்னை எடுத்தார். 8 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். நியூசிலாந்து 9 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன் எடுத்து இருந்த போது மதிய உணவு இடைவேளை எடுத்து கொள்ளப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு குப்தில் அவுட்டானார். நியூசிலாந்து அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து 2வது தோல்வியை சந்தித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து