முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 4-ல் பெருமாள் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மாசி தெப்பத் திருவிழா வரும் 4ம் தேதி நடக்கிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மாசி மகம் தெப்பத்திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் நாள் திருவிழாவான கொடியேற்றம் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாட வீதியில் அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை நடைபெறும். 23 மற்றும் 24ம் தேதி காலை தங்க சிவிகையில் ஏகாந்த சேவையும், 25ம் தேதி காலை கள்ளர் கோலத்திலும் சுவாமி வீதியுலா வருகிறார்.

மாலை 6 மணிக்கு மோகினி கோலத்திலும், இரவு 7 மணிக்கு ஆவணி மூல வீதிகளில் கருட வாகனத்திலும் பவனி வருகிறார். 5ம் நாள் திருவிழா 26ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு கேச வாகனத்தில் வைகுண்டநாதர் சேவையும் நடைபெறும். 27ம் தேதி இரவு ஆண்டாள் சன்னதியில் பெருமாளும், ஆண்டாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ம் நாள் திருவிழாவான மார்ச் மாதம் 3ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பம் முட்டுதள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். தெப்பத்திருவிழா வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.

அன்று மாலை 5 மணிக்கு தங்க சிவிகையில் பெருமாள் புறப்படுகிறார். இரவு 7.45 மணிக்கு டவுன்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் உபயநாச்சியாருடன் பெருமாள் வலம் வருகிறார். 5ம் தேதி உற்சவ சாந்தியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வரதராஜன், செயல் அதிகாரி அனிதா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து