முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பு

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

ஷாங்காய் - பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லை மாநிலமான அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்ட கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சினையில் அந்த நாடு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அருணாசல பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார்.

அங்கு புதிய ரெயில் பாதையையும், புதிய மின் உற்பத்தி நிலையத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி,

இந்த மாநிலம் இன்னும் 5 ஆண்டுகளில் அதிக அளவில் வளர்ச்சி அடைய நான் உறுதி கூறுகிறேன். விரைவான உயர்தர போக்குவரத்து வசதி, மின்சார வசதி ஆகியவற்றை ஏற்படுத்துவதன் மூலம் இந்த மாநிலம் முன்னேற்றம் அடையும்’ என்றார். பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

‘இது தெற்கு திபெத் பகுதி அருணாசல பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஏற்கவில்லை. இங்கு மோடி வந்திருப்பது ஒட்டு மொத்த உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று சீன வெளியுறவுத்துறை மந்திரியின் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. 1962–ல் ஆண்டு நடந்த இந்தியா–சீனா போரின் போது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தவாங் நகரை சீனா கைப்பற்றிக் கொண்டது. இது புத்த மதத்தினரின் முக்கிய வழிபாட்டு தலமாகும்.

அதிலிருந்து சீனா அருணாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் வாலாட்டி வருகிறது. இப்போது அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது, ‘இது எங்கள் பகுதி. மோடி வரக்கூடாது. என்று கூறி பிரச்சினையை கிளப்பி உள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த ஜப்பான் வெளியுறவுத் துணை மந்திரி அருணாசல பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தம் என்ற கருத்தை ஆதரித்து பேசினார். அந்த கருத்துக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது பிரதமரின் அருணாசல பிரதேச உரிமையை எதிர்த்துள்ள சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாசலபிரதேசம் இந்திய பூமி. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது’ என்று பதிலடி கொடுத்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து