முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் கோட் ரூ.4.31 கோடுக்கு ஏலம்

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சூரத் - பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலத்தல் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வந்திருந்தபோது, அவருடனான சந்திப்பின் மோடி அணிந்திருந்த இந்த கோட் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும். அதன் விலை ரூ.14 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் அந்த கோட் கிறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இது தொடர்பாக மோடிக்கு எதிராக காங்கிரஸ் உளஅளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் முன் வைத்தன. இந்நிலையில், குஜராத் மாநிலம், சூரத்தில் மோடி பிரதமரான பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட பரிகப் பொருள்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 நாள்கள் நடந்த இந்த ஏலத்தில் மோடியின் சர்ச்சைக்குரிய கோட்டும் ஏலத்தில் விடப்பட்டது.

3வது நாள் இறுதி நிலவரப்படி அதிக விலைக்கு யார் அதை கேட்கிறார்களோ, அவர்களுக்கு அந்த கோட் வழங்கப்படும் என அதிபர் விக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம், சூரத்தைச் சேர்ந்த பாவ்ஜி பாய் பட்டேல் என்பவர் ரூ.4.31 கோடிக்கு மோடியின் கோட்டை எலம் கோட்டார். இதுவே அதிக தொகை என்பதால், பாவ்ஜி பாய் பட்டேலுக்கு மோடியின் கோட் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மோடியின் பரிசுப் பொருள்கள் விளம்பரத் துக்காகவே, ஏலத்தில் விடப்படுவதாக குற்றம்சாட்டி சூரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து